கல்வாரி நாயகா கருணையின்
kalvaari naayagaa karunaiyin
கல்வாரி நாயகா கருணையின் வடிவம் தேவா காசினி மீது என்னை நேசக்கரம் நீட்டிய பாசமாய் மீட்டீரே - கல்வாரி நாயகா
1. என் பாவம் யாவையுமே மன்னித்து மறத்தீரே உம் இரத்தம் சிந்தி என்னையும் மீட்ட கிருபையாய் இரட்சித்தீர்
2. துன்பம் துயர் வரினும் தாங்க பலனளிப்பார் சோர்வுறும் நேரம் அன்புடன் தேற்றி அருமையாக அரவணைப்பீர்
3. உலகத்தின் மாய்கையில் நான் வீழ்ந்து முடியாமல் உம் கரம் பற்றியே உம் பின்னே நடந்தே உம் வழி எகிடுவேன்
4. வாழ்நாளை வீண் நாளாய் நான் கழித்திடாமலே ஆத்தும பாரம் பெற்றென்றும் வாழ கிருபையால் பெலனளிப்பீர்
5. உம் சித்தம் என்றென்றுமே நான் செய்ய அழைத்தீரே என் சித்தம் வேண்டாம் உம் சித்தம் போதும் என்றும் நான் செய்திடுவேன்
6. விண்மேக மீதினிலே நீர் வரும் வேளையிலே உம்மை நான் சந்திக்க ஆயத்தமாக்கும் உம்மோடு வாழ்ந்திடுவேன்