கல்வாரி மேட்டில் குருசை
kalvaari mettil kurusai
கல்வாரி மேட்டில் குருசை சுமந்து குருதியும் எனக்காக சிந்தினீரே கலங்கும் என் வாழ்வை கரை சேர்த்திடவே நீரும் எனக்காய் ஜீவன் விட்டீர்
1. கசையடிகள் கடினமாய் போர் வீரர்கள் பலவந்தமாய் - 2 வீதியிலே வருத்தமாய் நடத்தி அழைத்து சென்றனரே
2. மறுதலித்த பேதுருவை மன்னித்து மாற்றினீரே மனங்கசந்து அழுதவனை மகிமைக்கென்றும் நிறுத்தினீரே
3. கசந்த என் வாழ்வை மாற்றிடவே கசப்பான காடியை குடித்தவரே தனவந்தன் என்னை மாற்ற தரித்திரனாய் தொங்கினீரே
4. பாவி எனக்காய் பலியானீர் பாசமாய் என்னை அழைத்தீரே பக்கத்து கள்ளனை பரிவுடன் பரத்தில் சேர்த்துக் கொண்டீரே