கல்வாரி மறியே நாடினேன் நான் உம்மை
kalvaari mariyae naadinen naan ummai
1. கல்வாரி மறியே! நாடினேன் நான் உம்மை என் ரட்சகா கேளும் என் விண்ணப்பம் நீக்கும் என் பாதகம் ஆம் நான் இந்நாள் முதல் உம் அடிமை.
2. தொய்யுதே என் மனம் உம் க்ருபையால் தேற்றும் உயிரற்றேன் எனக்காய் மரித்தீர் உமக்கே தேவரீர் மாறாத சுத்தாங்க ஜீவ பலி.
3. என் பாதை தோன்றாது துன்பம் மூடும்போது வழி காட்டும் என் இருள் நீக்கிடும் கண்ணீர் துடைத்திடும் அலைந்து கெடாமல் தற்காத்திடும்.