கல்வாரி மலையில்
kalvaari malaiyil
கல்வாரி மலையில் - எந்தன் பாவங்களைப் போக்க தாவி உயிர் விடுத்த - கல்வாரி மலையில்
பாவி நானுந்தன் - பாதம் குனிந்து பரிவுடனே இப்போ - தாவி பணிந்து - கல்
தேடி வந்த மேய்ப்பா - பாதம் குனிந்து வரும் அழிந்து போன ஆட்டை - தேடி வந்த மேய்ப்பா ஆடுகளுக்குந்தன் - உயிர்தனைக் கொடுத்து நானே நல்ல மேய்ப்பன் - என்று உரைத்து - கல்
பார் சிலுவை எடுத்து - எந்தன் பாவங்களைத் தடுக்க மேவி உயிர் விடுத்து - பாரச் சிலுவை எடுத்து கோரமாக - காயங்கள் பட்டு குரிசினில் நீர் - முள் முடி தரித்து - கல்
3. எத்தனையோ துன்பம் - இந்த ஏழைகளை மீட்க அத்தனையும் சகித்து - எத்தனையோ துன்பம் பக்தி நெறியில் என்னை - நடத்த வேதா பாடுகள் நீர் - சகித்த மெய்த் தேவ - கல்
4. குத்திடச் சேவகனும் - உந்தன் விலாவிலே குருதியும் வடிய - குத்திடச் சேவகனும் வழிந்த என் உதிரத்தின் - வல்லமை தந்த புண்ணியனே உம்மை - போற்றி வந்தேன் - கல்
5. தோத்திரம் மெய்த் தேவா - என்னை பத்திரமாக மீட்ட தாவீதின் கோத்திரம் - தோத்திரம் மெய்த் தேவா குருசினில் தொங்கி நீர் - குருதியும் விட்டார் பாரினிலே என்னைப் - பரிவுடன் வைத்தீர்