கல்வாரி அழைக்குது
kalvaari azhaikkudhu
கல்வாரி அழைக்குது உம்மை-கண்ணீர் சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே
இயேசு தம்மை சிலுவையிலே கொன்றிட்ட பாவியரை மன்னிக்கவே மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா-நின் கருணைக்கு ஈடில்லையே
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன் பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ