கல்வாரி அன்பிதோ அழைக்கிறதே
kalvaari anbidho azhaikkiradhae
கல்வாரி அன்பிதோ அழைக்கிறதே தள்ளிடாதே தருணம் இது
1. மாயமாம் உலகம் மாய்ந்திடுமோ மாறிடா நேசர் இயேசுவே தாயின் மேல் அன்பு தந்திடவே தற்பரன் கரம் நீட்டி அழைக்கிறாரே
2. காரிருள் பூமியை மூட்டுதே. காலம் நெருங்கி சேர்ந்திடுதே காயங்கள் ஏற்றவர் நோய்களை கருணையுடன் நீக்க அழைக்கிறாரே.
3. பூமியில் புண்ணியர் புதுமை இதே பூரணனாய் உன்னை மாற்றுவதே. மானிடர் கோர்த்திட சாட்சியாக மன்னவன் இயேசுன்னை நிறுத்துவார்
4. தாய் தந்தை சேரும் மாறிட்டார் தாம் ஒரு நாளும் மாறாத நேசன். தவித்து நிற்கும் உன்னை தயவுடனே தம்மிடத்தில் அவர் அழைக்கிறாரே
5. பாவ சாபம் நிறை சரீரம் இதைத் தேவனின் சாயலில் மறை ரூபாய்த் தாம் வரும் நாளில் மாற்றி உன்னைத் தம்முடன் மகிமையில் சேர்த்துவிடுவார்