கல்வாரி அன்பை நான்
kalvaari anbai naan
கல்வாரி அன்பை நான் தியானிக்கையில் கல்மனமும் எண்ணில் உருகிடுத நல் நேசர் இயேசுவே உம்முடன் யான் சிலுவையில் அறைந்திட ஒப்புவித்தேன்
1. என் பாவ சாபமும் ரோகங்களும் நின் திரு மேனியில் ஏற்றிடவோ கொலை மரம் அந்த சிலுவை தனில் கொலை செய்யப்பட்டார் தொங்கினாரே! - கல்வாரி
2. கள்வரின் மத்தியில் அறையப்படும் முள்முடி சூடிய, துயரப்பட்டீர்! முகந்தனில் உமிழ்ந்துமே அடிக்கப்பட்டீர் மூன்றாணி மீதினில் ஜீவனீந்தீர்! - கல்வாரி
3. பதினாயிரம் பேரில் சிறந்த நேசரே பாதகனைப் போல அகப்பட்டீர்! தழும்புகள் தோன்றவே காயப்பட்டீர் அழகையும் இழந்தீரே எனக்காகவோ! - கல்வாரி
4. விலையேறப்பெற்ற உம் திரு இரத்தம் விலா வினின்று நீர் வடித்தீரல்லோ ! விலையேறப்பெற்ற நல் சபை ஆகவே தலையானீர் ஜீவனை ஈந்ததாலோ! - கல்வாரி
5. குருசில் பலியானீர் முற்றிலுமாய் குரு இயேசு நாதா நீர் எனக்காகவோ? குருசில் மரித்து நான் பிழைத்திடுவெனோ குருவே உன் சாயலை அடைந்திடுவேன் - கல்வாரி