கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர்
kallaana nenjai indrae maatruveer
கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர் ஐயா கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர்.
1. கற்பாறை போன்ற எந்தன் கல்நெஞ்சே அது பற்பல தீமைகளைச் செய்யுதே.
2. கீழ்படியாத என் கல் நெஞ்சே - ஐயோ கீழ்ப்படிய பண்ண மாட்டீரோ?
3. என்ன போதனை கேட்டும் கல் நெஞ்சில் சுவாமி ஒன்றும் தங்கி பலன் காணேனே.
4. தினமும் திரு வசனத்தை வாசித்து நெஞ்சில் அனலும் அருளும் பெறவில்லையே.