கலிலேயா கடலினிலே
kalileyaa kadalinilae
கலிலேயா கடலினிலே அலைமோதும் சீஷரைப் போல தடுமாறும் மானிடனே தயங்கிடாதே தேவனை பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
திசை மாறும் சிறு படகாய் திசை கெட்டு திரிகின்றாயோ எதிர் காற்றோ எதிர்ப்பவரோ இடறிடாதே இயேசுவைப் பார்
கடல் தனக்கே அதிகாரி கலக்கத்திலே பரிகாரி வனாந்தரத்தில் வழியாவார் வேதனைகள் மாற்றிடுவார்
என் முகத்தை தேடிடுவீர் என் சமூகம் முன்னே செல்லும் என்று ரைத்த யேகோவா அவர் இறுதி வரை நடத்திடுவார