கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
kalgal kooppidum nee pesaavittaal
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் பாடாவிட்டால்
ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்து விட்டால் கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா
வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தை மறுதலித்தால் ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே
ராஜ்யத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணி விட்டால் வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்