கலங்காதே தவிக்காதே
kalangaadhae thavikkaadhae
1. கலங்காதே தவிக்காதே கர்த்தர் தாமே உன் மேய்ப்பர் உறங்காமல் தூங்காமலே அவர் உன்னைக் காக்கிறார்
2. திகையாதே பதையாதே இயேசு தாமே உன் மேய்ப்பர் இராப்பகலாய் உனக்காக வேண்டுதல்கள் செய்கிறார்
3. காக்கும் வல்ல மீட்பருண்டு சிந்தை எதுவும் வேண்டாமே உன் துயரம் யாவும் முற்றாய் அறிந்தவர் அவரே
4. சிங்கக் குட்டி பட்டினியால் தேவ மக்கள் பூர்த்தி யாம் திடமாய் அவர் கரத்தில் அடங்கிப் பொறுத்துப்பார்
5. தன் மகனை தந்த தெய்வம் தருவாரே யாவையும் கேடு ஒன்றும் வந்துடாமல் காத்திடுவார் நிறைவாய்
6. கவலை வேண்டாம் கண்ணீர் வேண்டாம் கர்த்தரையே நம்பி கொள் நம்பினோரை கைவிடேன் நான் என்று அவர் சொல்கிறார் .
7. அல்லேலூயா அல்லேலூயா நன்மைக் கர்த்தர் நமக்கு நல்ல கர்த்தர் நமக்குண்டு அல்லேலூயா ஆமென்