கலைமான்கள் நீரோடை தேடும்
kalaimaangal neerodai thedum
கலைமான்கள் நீரோடை தேடும் - எந்தன் இதயம் இறைவனை நாடும் உள்ளத் தாகம் உந்தன் மீது கொண்ட போது எனக்கு வேறென்ன வேண்டும்
காலம் தோன்றா பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் ( 2 ) உயிரைத் தந்திடும் கருவினிலே அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் ( 2 ) குயவன் கையாலே மண்பாண்டம் உடைந்திடும் கதையின் நாயகன் நான் இன்று
பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் ( 2 ) காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால் அழகிய மணிமாலை நான் ஆவேன்