கலைமான் நீரோடையை
kalaimaan neerodaiyai
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை ஏங்கியே நாடியே வருகின்றது ( 2 )
உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 இறைவா உம்மை என்று நான் காண்பேன் கண்ணிரே எந்தன் உணவானது
மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க என்னுள்ளம் பாகாய் வடிகின்றது