கையளவு மேகம் காணும்
kaiyalavu megam kaanum
கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமுகத்தை விடவே மாட்டேன்
பெரும் மழை இரைச்சசல் சத்தம் காதுல கேட்டுப்புட்டேன் மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன்
பவுலும் சீலாவைப்போல நான் சிறையில மாட்டிக்கிட்டேன் கதவுகள் திறக்குற வரைக்கும் அப்பா உம்மை விடவே மாட்டேன்
தன்னந்தனியா தானியேல் போல சிங்கம் கெபியில மாட்டிக்கிட்டேன் அபிஷேகம் உள்ள பயம் இப்ப இல்ல சிங்கம் வாயை கட்டிட்டிங்க