கடந்து வந்த பாதையை
kadandhu vandha paadhaiyai
கடந்து வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன் கண்ணீரின் வாழ்க்கையை நான் நினைத்து பார்த்தேன் கர்த்தாவே உமதன்பில்லை என்றால் நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்
உளையான சேற்றினிலே வீழ்ந்த என்னையுமே கரம்பிடித்து தூக்கிவிட்டீர் ஆதரவின்றி தவித்திட்ட என்னை அன்னையை போல அரவனைத்தீரே இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே
நான் நம்பியோரெல்லாம் என்னை கைவிட்ட போதும் நான் இருப்பேன் என்று சொல்லி கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே கண்மணிபோல காத்து வந்தீரே இயேசுவே நீரே என் சொந்தமே
செய்யாத குற்றங்களை என் மேல் சுமத்திடவே இயேசுவே உம்மை நினைத்தழுதேன் பாவமில்லாத பரிசுத்தரும்மை பாவிகள் சேர்ந்து கொலை செய்தனரே இயேசுவே உம்மையன்றி தெய்வமில்லை