கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
kadandha naalellaam paadhugaatheerae
கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2 புது கிருபை புது அபிஷேகம் புது பெலன் புது வாழ்வு -2
எத்தனையோ நாட்கள் எத்தனையோ வாரங்கள் எத்தனையோ மாதங்கள் எத்தனையோ ஆண்டுகள்-2 ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் -2
இரவும் பகலெல்லாம் கண்மணிபோல் நம்மை உறங்காமல் காத்திடுவார் உயிருள்ள தேவன் அவர்-2 நடக்கும் போதும் படுக்கும் போதும் நிற்கும் போதும் உட்காரும் போதும்-2
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுகின்றவரே பாதைகளிளெல்லாம் நெய்யாய் பொழிபவரே-2 ஆபத்துக்காலத்தில் விபத்து நேரத்தில் துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில்-2