கடந்த நாளெல்லாம் கண்மணிபோல்
kadandha naalellaam kanmanibol
கடந்த நாளெல்லாம் கண்மணிபோல் என்னை காத்தவர் நீரல்லவோ புதிய நாளுக்குள் பிரவேசிக்க பெலன் தந்தவர் நீரல்லவோ -2
பெலத்தினால் இல்லையே திறமையினால்இல்லையே கிருபையினாலே இந்த புதிய நாளுக்குள் வந்துவிட்டோம் நாம் கண்டுவிட்டோம் -2
வாக்குகள் தந்தீரே நன்றி நன்றி ஐயா வாழவும் வைத்தீரே நன்றி நன்றி ஐயா-2 சின்னவன் என்னை நினைத்தீரே நன்றி நன்றி ஐயா என் எல்லைகள் பெருக செய்தீரே நன்றி நன்றி ஐயா-2
நன்றி நன்றி ஐயா இந்த நாளை காண செய்ததால் } -2
தேவைகள் சந்தித்தீரே நன்றி நன்றி ஐயா சூழ்நிலை மாற்றினீரே நன்றி நன்றி ஐயா -2 என் தலையை நிமிரச் செய்தீரே நன்றி நன்றி ஐயா நிறைவாய் என்னை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா
ஊழியம் தந்தீரே நன்றி நன்றி ஐயா நல்ல குடும்பத்தை தந்தீரே நன்றி நன்றி ஐயா -2 மகிமையால் என்னை நிரப்பினீரே நன்றி நன்றி ஐயா உன்னத அனுபவம் தந்தீரே நன்றி நன்றி ஐயா