கடலின் மேல் நடந்திட்ட
kadalin mel nadandhitta
கடலின் மேல் நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்லை கவலை காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் எந்தன் துணையாய் இருப்பதால் எனக்கேது கவலை
(என்) ஆராதனை இயேசுவுக்கே-4
உம்மைப்போல என்னை காத்திட உம்மைப்போல என்னை தாங்கிட உம்மைப்போல என்னை நடத்திட யாரும் இல்லையே-இயேசய்யா யாரும் இல்லையே-2
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே-2
நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே-2