கடல் நோக்கி நதிகள் பாயும்
kadal nokki nadhigal paayum
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும் அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் ( 2 )
குருவிகள் பறந்திடும் மேகத்திலே ஏணி தேவையில்லை - 2 நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை ஞாலம்தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் - 2
2 . காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும் உள்ளம் ஏனோ உணர்வதில்லை ( 2 ) தவறிச் செல்லும் ஆடு நானே என்னை தேடுவதேன்