கடக்க முடியாத நதியே
kadakka mudiyaadha nadhiyae
கடக்க முடியாத நதியே அடக்க முடியாத அலையே உடைக்க முடியாத உறவே உடைக்கப்படுதே என் சுயமே நிறைந்து வழியும் என் அகமே நினைவு முழுதும் உம் முகமே
என் கட்டுப்பாட்டின் எல்லைக் கோட்டை கடந்து விட்டேன் கர்த்தரின் ஆவியினால் என் இஷ்டப்படி ஏதும் செய்ய இயலவில்லை கர்த்தரின் வசமானேன் என் கால்களும் மண்ணோடு இல்லாமல் விலக சிந்தையும் உலகத்தை வெறுப்புடன் உதர கர்த்தரின் ஆவிக்குள் நான் மாறினேன் நிச்சயம் ஆழத்தில் நான் மூழ்கினேன்
கனுக்கால் அளவு போதவில்லை கதறி நான் ஜெபித்தேன் முழங்கால் அளவிலும் திருப்தி இல்லை முழங்கால் முடக்கி நின்றேன் புரண்டிடும் நதியினில் விடைதனை அடைந்தேன் திரண்டிடும் நேசத்தால் உலகினை மறந்தேன் சின்ன வட்டங்களை விட்டு வெளியேறினேன் அன்பின் பிதா திட்டங்களில் அனலாகினேன்