கடைசிகால அபிஷேகம்
kadaisigaala abishegam
கடைசிகால அபிஷேகம் மாம்சமான யாவர்மேலும் அறுவடையின் காலமிதே தூய ஆவியால் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே அக்கினி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாக பாய்ந்திடுமே
எலும்புகளின் பள்ளத்தாக்கில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் மலை ஜெபவேளையில் ஒரு கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபு நடுங்கினபோல் அக்னி மழையாகபொழிந்திடுமே
சீனாய் மலைமேலே அக்னி ஜீவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னில் அக்கினியை ஊற்றிடுமே