கடைசி நாட்களிலே
kadaisi naatkalilae
கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவன் அவர் மாமிசமானவர் யாவரின் மேலும் மாரியைப் பொழிவேன் என்றார் – அருள் மாரியைப் பொழிவேன் என்றார்
பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே அருள்மாரி பொழியும் என்றார்-இன்று அருள்மாரி பொழியும் என்றார் – 2
தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார் மாரிதனைக் கண்டபின் – அருள் மாரிதனைக் கண்டபின்
முழங்காலில் நின்றோரெல்லாம் முழங்கிடுவார் அன்று முழங்கால்கள் மடங்கும் இயேசுவின் நாமம் தளங்களை நிரப்பி விடும் – பணித் தளங்களை நிரப்பி விடும்
இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே தந்தோரை எழுப்பிவிடும் – தம்மை தந்தோரை எழுப்பிவிடும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em A F# Bm D Em Bm A Em A D D G A D D G Bm A Em A D D G A D D G Bm A Em A D D G A D D G Bm A Bm A D D G A D D G Bm A Bm A D