கடைசி காலம் அதை மறந்திடாதே
kadaisi kaalam adhai marandhidaadhae
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே
மறுமையின் வாழ்வடைய நாம் மறுரூபமாகிடுவோம் மணவாட்டியாய் ஆகிடுவோம்
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
மறந்திடுவேன் நான் மறந்திடுவேன் எந்தன் துன்பங்கள் அனைத்தையும் ஒரு தினத்தில் - 2
கண்ணீரை துடைத்திடுவார் அவர் பிரதிபலன் தந்திடுவார் நான் யுகயுகமாய் வாழ்வேன்
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
போராட்டம் அனைத்தும் மறந்திடுவேன் நான் ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் - 2
பாரினில் துன்பம் சகித்த தம் பரிசுத்த மணவாட்டியாய் திரு சபையாக ஆயத்தமாவோம்
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
வழங்களால் நிறைந்தோம் கனிகளால் வளர்ந்தும் நேசரை சந்திக்க ஆயத்தமா ?
விளக்குகள் அணையாமல் பாத்திரம் எண்ணெயால் நிரப்பிடாயோ என்றும் விழிப்புடன் ஜெபித்திடுவோம்
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
வாக்கு மாறாதவர் என்னோடு இருப்பதால் வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவர் - 2
காலம் தாமதமானாலும்அவர் வாக்குமாறாதவரே இன்னும் காத்திருந்தே அடைவோம் - 2
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
இரவு போயிடுதே பகலும் வந்திடுதே இம்மைப்பொழுதிலே வந்திடுவார் - 2
விழித்து எழுந்திடுவோம் சீயோன் யாத்திரையில் பங்கடைவோம் நாம் மறுரூபமாகிடுவோம்
பல்லவி
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2