காட்டும் வழி என் சந்தோஷம்
kaattum vazhi en sandhosham
1. காட்டும் வழி என் சந்தோஷம் காட்டும் ஒளி போ என்கிறார் நாடோறும் விசுவாசிப்பேன் மீட்பரின் பாதை பின் செல்வேன்.
2. ஆழ்ந்த நீரில் நடத்துவார் கார் பள்ளம் சாய்ந்த குன்றிலும் கோரப் புசல் முழங்கினும் நேர் கரை கொண்டென்னைச்சேர்ப்பார்.
3. பாதை காட்டி நித்ய ஜீவன் பார் உன்னுடைய தென்கிறார் பரீட்சை பாடத்தாலுன்னை பாதீசுக்கும் ஆக்கிறார்.
4. துன்பம் அவர் நடத்துதல் இன்ப கீதம் பாடச் செய்யும் என் பாத்ரம் ரூடவ்வால் நிரப்பும் நன்கு சித்தம் செய்ய ஏவும்.
5. நடத்தும் பாதை பேரின்பம் நீரோடையின் புல்லென் மேய்ச்சல் அமர் நீர் நடத்த இன்பம் அதே வழி சீயோன் திடல்.
6. சொந்த மந்தை நடத்துவார் கன்மலை நீரைக் கொடுப்பார் கோல் தடியால் ஆற்றல் செய்வார் தேவனிடம் கொண்டுசேர்ப்பார்.