காற்று வீசினாலும்
kaatru veesinaalum
காற்று வீசினாலும் பெருமழை பொழிந்தாலும் கை விட மாட்டீர் -2
பல்லவி
திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர் - என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் -2
1.கருவில் கண்டீர் என்னை தெரிந்தெடுத்தீர் காலமெல்லாம் உந்தன் புகழை பாட வைத்தீர் -2
பல்லவி
எப்படி சொல்ல வேண்டும் எப்படி பாட வேண்டும் எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2
2.புவி உருவாகும் முன்னே குறித்து வைத்து பூவுலகில் உம்மை என்றும் துதிக்க வைத்தீர் -2
பல்லவி
எப்படி சொல்ல வேண்டும் எப்படி பாட வேண்டும் எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2
ஆ...ஆ ....ஆ .....காற்று வீசினாலும் பெருமழை பொழிந்தாலும் கை விட மாட்டீர் -2
பல்லவி
திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர் - என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் -2