காத்து நிற்கின்றோம் நாங்கள்
kaathu nirkindrom naangal
காத்து நிற்கின்றோம் நாங்கள் வேண்டி நிற்கின்றோம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை நாடி நிற்கின்றோம்
பெந்தேகோஸ்திர நாளிலே கூடிய மேல் அறையைப் போல் இன்றே எங்கள் உள்ளங்கள் பேச வல்லமை ஊற்றிடுமே இந்தைகள் மாறட்டுமே தேவ சத்தங்கள் கேட்கட்டுமே மந்தை மந்தையாய் உம்திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள் ஆவியில் பேசிடவே தீர்க்கதரிசனம் தேவா நின் வரங்கள் தயவாக தந்திடுமே அற்புதம் நடக்கட்டுமே புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட அன்பினை ஊற்றிடுமே