காத்தாவே உம்மை நம்பி
kaathaavae ummai nambi
காத்தாவே உம்மை நம்பி சுத்தர்களாய் நிலைத்திருந்து அர்த்தமுள்ளநல் வாழ்வு வாழ்ந்த பக்தர்களைப் போல் மாற்றிடுமே
விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட வீரனாய் என்னையும் மாற்றிடும் ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல் ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும்
ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட ஜெயாளியாய் என்னை மாற்றிடும் எஸ்தரைப் போல அன்னாளைப் போல என்றுமே வாழ் உதவி செய்யும்
சோதனை வென்று சாதனை படைக்க சோர்வுறும் பொழுதில் தேற்றிடும் யோசேப்பைப் போல் தானியேலைப் போல் யோசனையுடனே வாழச் செய்யும்