காத்தாவே நீர் என்னை தேற்றும்
kaathaavae neer ennai thetrum
காத்தாவேநீர் என்னை தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிகொள்வேன் சோகத்தால் என்னுள்ளம் சேரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும்
என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகின்றீர் மானானது நீரோடையை - 2 வாஞ்சிப்பதுபோல் உம்மைவாஞ்சிக்கிறேன்
மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம் தனை உணரும் நல்ல உள்ளம் தாரும் - 2 உமதாவியால் என்னை நிரப்பிடும்
உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ புடமிட்டென்னை பொன்னாக்கிடும் - 2 பரிசுத்த வழியில் நடத்திடும்