காருண்யமே உந்தன்
kaarunyamae undhan
காருண்யமே! உந்தன் தயவு பெரிதே காலா காலம் எந்தன் மேல் மேன்மை ஏதும் என்னில் இல்லை யாவும் உம் கிருபை அன்றோ
1. காரிருளில் எந்தன் ஒளியானீரே கானகத்தில் எந்தன் வழியானீரே. கைவிடேன் உனை என் வாக்கு ஈந்ததால் கலங்காது முன்னேறுவேன்! - காருண்யமே
2. என் கிருபை போதும் என்ற தேவா என் பெலவீனத்தில் பெலனானார் பரிதபித்திடும் நல் ஆசிரியர் நீரே பரிவுடன் சுமந்தீரன்றோ ! - காருண்யன்!
3. பேர் உருவாகி முன்னர் கண்டெடுத்தார் பாறை வென்ற எந்தன் இயேசு நாதா பரிசுத்தமாக்கும் உந்தன் வார்த்தையால் போரினில் ஜெபித்திடுவேன்! - காருண்யன்!
4. நாட உலகத்தில் அமிழ்ந்த என்னை பாசம் காமத்தில் நீர் தூக்கினீரே நீசனும் என்னை உம் சாயல் மாற்றிடும் வாசம் செய்ய உம்முடன்! - காருண்யன்!
5. பூரணர் இயேசுவே நீர் வெளிப்படுவீர் பூரணனாகி உந்தன் முகம் காணுவேன் நேசரே உந்தன் மார்பினில் சார்ந்தும் நித்தியம் சேவிப்பேன்! - காருண்யன்!