காருண்யமான கர்த்தாவே
kaarunyamaana karthaavae
காருண்யமான கர்த்தாவே காத்திடும் என்னையும் நாதா கேவா உம் சக்கியங்கள் மறந்திடாமல் ஜீவிக்க வரம் தாருமே - ஆஆஆ
இக லோக ஜீவியம் இனி வரும் வாழ்வுக்கு இணையில்லை என்று நான் அறிந்தேன் - ஆ ஆ இதுவரை காத்தீர் இனியும் நடத்தும் இகபர நன்மைகள் ஈந்தெனகாய்
ஆண்டாண்டு காலங்கள் அலைந்து தவித்தேன் அழைத்தீரே இயேசு என் ராஜா - ஆஆ புல்வெளி நடத்தி புகலிடம் தாரும் புது ஜீவன் புது பெலன் தந்திடுமே
வெளிச்சம் உம் பாதையில் விலகாமல் செல்ல உணர்த்தும் நல் இதயம் நீர் தாரும் - ஆஆ பாவங்கள் அணுகா பரிசுத்த வாழ்வை பரமனே புண்யமாய் அளித்திடுமே