காருண்மே காருண்யமே என் வாழ்வின் கேடகமே
kaarunmae kaarunyamae en vaazhvin kedagamae
காருண்மே காருண்யமே என் வாழ்வின் கேடகமே ஆராதனை ஆராதனை ஆயுள் முழுவதுமே இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே-3 இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே-
உமது பார்வையிலே எனக்கு தயை கிடைத்தால் போதுமய்யா-2 தடைகள் எல்லாம் படிகளாகும் மலைகள் எல்லாம் வழிகளாகும்-2
மனதுருகும் தெய்வம் நீரே மன்னிப்பதில் தயை பெருத்தவரே மனந்திரும்பி வருகின்ற வேளை அள்ளி அணைக்கும் அன்பரே
உம்மீது படரும் கொடி நானே ஆயள் முழுதும் நிதை;திருப்பேனே உம்மாலன்றி தனியே என்னால் ஒன்றும் செய்ய முடியாதே
வலது கரத்தால் தாங்குகின்றீர் இடது கரத்தால் தழுவுகின்றீர் உள்ளங்கையில் பொறித்து உள்ளீர் எவரும் பறித்திட முடியாதே