கார்மேகம் போன்ற இருள்
kaarmegam pondra irul
கார்மேகம் போன்ற இருள் சூழும் நேரம் ஒருபோதும் மனமே நீ மயங்காதே சிறிதேனும் இருள்கண்டு கலங்காதே ஒளியாம் இயேசுவை மறவாதே
கொடுங்கோபியோ படுபாவியோ கொலையாளியோ பெரும் குற்றவாளியோ யாராயினும் இயேசுவண்டை வா -2 மனம் உடைந்தால் குணமடைவாய் அருள்பெறலாம் இன்றே உனக்காகவே மரித்தார் இன்றே புது வாழ்வையே நீ பெறலாம் இன்றே
வியாதியினால் வாதனையோ வறுமையினால் வேதனையோ எதுவாயினும் இயேசுவண்டை வா யாராயினும் இயேசுவண்டை வா -2 மனம் உடைந்தால் குணமடைவாய் அருள்பெறலாம் இன்றே உனக்காகவே மரித்தார் இன்றே புது வாழ்வையே நீ பெறலாம் இன்றே