காரியத்தைக் கைக்கூடி
kaariyathaik kaikkoodi
காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் - 2
இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் - 2
அல்லேலூயா அல்லேலுயா காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் - 4
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே - 2 கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் - 2
2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே - 2 கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் - 2