காரியங்கள் வாய்க்கும்
kaariyangal vaaykkum
காரியங்கள் வாய்க்கும் என் காலம் இது தடைகள் எல்லாம் விடையாகும் நேரம் இது (2)
பல்லவி
யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன் யெகோவாயீரே என் தேவையாவும் சந்தித்தீர் உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே
1. இலையுதிர் காலத்தில் தனித்து நான் நிற்கையில் என்னை பார்த்து நகைத்தனர் எரித்திட நினைத்தனர் (2) வரட்சியின் நாட்களை செழிப்பாக மாற்றின நம் கர்த்தர் பெரியவர் ஆராதிப்போம் (2)
பல்லவி
யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன் யெகோவாயீரே என் தேவையாவும் சந்தித்தீர் உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே
2. எதிர்பார்த்த வாசல்கள் எல்லாமே அடைத்தன என் பலன் குறுகியும் உம்கரம் விலகல (2) நினைத்திடா வேளையில் புதிதான வாசலை நமக்காகத் திறந்தாரே ஆராதிப்போம் (2)
யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன் யெகோவாயீரே என் தேவையாவும் சந்தித்தீர் உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே (2)