காரிருள் சூழ்ந்தாலும் குழப்பங்கள் வந்தாலும்
kaarirul soozhndhaalum kuzhappangal vandhaalum
காரிருள் சூழ்ந்தாலும் குழப்பங்கள் வந்தாலும் கலங்காதே மனமே காத்திட ஒருவர் உண்டே நீ அறிவாய் அவர் நாமம் அதிசயமே
போதனை செய்ய வேதமே தந்தவர் பாதுகாப்பார் உன்னை நாதனை நம்பு , நாமம் ஒன்றுண்டு ஆலோசனைக் கர்த்தராம்
சொல்லி முடியாத சோதனை சூழும் காலங்கள் வந்திடுமே கல்வாரி நாயகன் ஜெயம் தரும் தேவன் அவர் நாமம் " வல்லமையே
சஞ்சலம் நிறைந்தே சோர்ந்திடும் மாந்தர்க்கு அன்பினை போதிப்பாயோ அஞ்சிடும் காலம் ஆறுதல் தருவார் அவர் நாமம் ' சமாதானமே
சத்திய சாட்சிகள் எழும்பிட இன்றே சார்ந்திடுவாய் இயேசுவை பக்தியாய் வாழ்ந்தே சேருவோம் சீயே அவர் நாமம் நித்திய பிதா