காரிருள் இராவினிலே
kaarirul iraavinilae
காரிருள் இராவினிலே - கானங்கள் கேட்டிடுதே கர்த்தனாம் ராஜன் இன்றுதித்தாரே என்றுரைக் கேட்டிடுதே
விண்ணவர் கூட்டங்கள் , எண்ணிலா சேனைகள் வண்ணமாய் செல்கின்றாரே மன்னவன் மண்ணிலே துயில்வதைக் காண போகின்றார் பெத்தலைக்கு நாமும் போவோமே நித்யத்திற்கு
உத்தம ஷேர்கள் , சத்திய சேனைகள் பக்தர்கள் கூடுகின்றார் கர்த்தனாம் ராஜன் சித்தமே செய்ய காணவே செல்கின்றாரே - நாமும் கூடவே செல்லுவோமே
ஆட்டிடையர் கூடி பாட்டுகள் பாடி மாட்டுத் தொழுவம் செல்கின்றார் வாடும் இவ்வுலகத்திற்கு வழியாக வந்தவரை தேடியே செல்கின்றாரே நாமும் கூடியே செல்லுவோமே