காரிருள் அகலும் இந்த வேளை
kaarirul agalum indha velai
காரிருள் அகலும் இந்த வேளை கர்த்தர் என் கரம் தாங்கினார் பாரினில் நான் வாழும் நாட்களெல்லாம் பரனே உம்மைப் பின்தொடர்வேன்
வானாந்திர பாதை நான் சென்றாலும் வல்ல தேவன் தாகம் தீர்ப்பாரே அனாதையாய் நானும் அலைந்தாலும் அன்பரே உம் குரல் தேற்றுமே
கல்வாரிக் காட்சி நானும் கண்டேன் கண்ணீர் சிந்தி ஊழியம் செய்வேன் முள்முடி அணிய நேரிட்டாலும் மீட்பரே உம் ஆவி தாருமே
தீயைப்போன்ற தீமைகளை வெல்ல தண்ணீர் ஓடும் யோர்தானைத் தாண்ட மண்ணின் மேடாய் எரிகோகள் மாற மன்னவா உம் பெலன் தாருமே