காணிக்கைப் பொருட்களை இறைவா எம்
kaanikkaip porutkalai iraivaa em
காணிக்கைப் பொருட்களை இறைவா எம் கரங்களில் ஏந்தி உம் பீடம் வந்தோம் ( 2 )
எங்களின் இதயத் தோட்டத்திலே எழில் மலர் காய்கனி நிறைந்ததய்யா ( 2 ) பொங்கிடும் மகிழ்வுடன் பறித்து வந்து - 2 உம் பொன்னொளி பீடத்தில் குவித்து வைத்தோம்
கோதுமை மாவுடன் எம் மனதில் கொண்டுள்ள ஆசையைப் பிசைந்தெடுத்து ( 2 ) வேதனைத் தீயினில் வேக வைத்து - 2 நல் வெண்ணிற அப்பமாய் கொண்டு வந்தோம்