காணிக்கை தர நான் வருகின்றேன்
kaanikkai thara naan varugindren
காணிக்கை தர நான் வருகின்றேன் உன் கரங்களில் என்னைத் தருகின்றேன் காணிக்கை தர நான் வருகின்றேன் ( 2 )
1. என்னக் கொடுத்தாலும் பயனில்லை - நான் என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் ( 2 ) என்னையே தான் நீ கேட்கின்றாய் - நான் என்னையே முழுவதும் தருகின்றேன்
2. சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் - மனம் உள்ளெமும் ஆசைகள் ஒவ்வொன்றும் ( 2 ) ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் - அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் ( 2 )