காணிக்கை மலர்கள் உம்பாதம் வைத்தோம்
kaanikkai malargal umbaadham vaithom
காணிக்கை மலர்கள் உம்பாதம் வைத்தோம் கருணை மழை பொழிந்தாய் காணிக்கை தந்தோம் இதையேற்று உனதாக்கி புதுவாழ்வு தர வேண்டும்
வானம் தந்த ஒளிச்சுடர்கள் மேகம் தந்த மழைத்துளிகள் இவையெல்லாம் சிறந்தவையன்றோ நாங்கள் தரும் ஒவ்வொன்றும் குறைவுள்ள தென்றாலும் ஏற்றிட வேண்டுகின்றோம் நாங்கள் உம் சாயல் நாங்கள் உம் அன்பு எம்மையே ஏற்பாய் பரம்பொருளே
தினம் தினம் என் வாழ்வினிலே பெறுகின்ற எல்லாமே உன் அன்பின் கொடைகள் தானே எம் வாழ்வின் இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே அப்பமாய் தருகின்றோம் உம் உடலாய் மாற பிறருக்காய் உடைய எமையே ஏற்பாய் பரம்பொருளே