காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம்
kaanikkai karam endhi naan varum neram
காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம் காலத்தின் தலைவா நீர் கரம் நீட்ட வேண்டும் காரணத்தோடு எனைப் படைத்தவரே காணிக்கையாய் எனை ஏற்றுக் கொள்விரே
உள்ளத்தை உமக்கே தர வந்தேன் உகந்தது அதுவே என நினைத்தேன் ( 2 ) உலகத்தை அன்பால் ஈர்த்தவரே - 2 உமக்கென எனை நான் தருகின்றேன்
என்னகம் படைத்து எனைக் காக்க என்ன நான் தருவேன் உமக்கெனவே ( 2 ) எனக்கென்று ஒன்றில்லை இவ்வுலகில் - 2 என்னையே அளிக்கின்றேன் உமக்குடனே