காணீர் அற்புதம்
kaaneer arpudham
காணீர் அற்புதம் வானத்திலே மணி மாதிவளோர் பாரும் அதிசயமே
சூரியனை அணிந்த வளாய் தேவனின் நீதியை தரித்தவளாய் கிறிஸ்து என்னும் சந்திரன் சாட்சியின் - நின்று கிருபையே நிதம் நிலைப்பவளே - காணீர்
தலையில் பன்னிரண்டு தாரகையின் முடி வீசும் ஒளி ஆவியினால் நீதிக்குட்படுத்தும் - திரு அப்போஸ்தலர் ஊழியமே - காணீர்
தேவ புத்திரர் வெளிப்படவே வேதனை கொண்டவள் அழுகிறாள் யாவையும் ஆளுமோர் ஆண்மகவை - அவள் ஈன்றிடும் வேளையே வந்ததினால் - காணீர்
விண்ணோடு நேர் சுத்தரையே வீழ்த்தி தான் வாலாலோர் வலுசர்ப்பம் விழுங்க ஆவலாய் ஆண் மகவை - அது விழிப்புடன் அவள் முன்னே நிற்கிறதே - காணீர்
ஜெயமெடுத்தோர் ஆண் மகவாய் சேர்த்திட தேவ சிங்காசனத்திலே கிறிஸ்துவின் நிறைவென்னும் பூரணமே- வர விசுவாசத்தில் இணைந்தோங்கிடுவோம் - காணீர்