காண்பீரோ நீர் தேவ
kaanbeero neer deva
காண்பீரோ நீர் தேவ மகிமை மாண்புறும் தன் கிரியைகளை விசுவாசிப்ப வரால் கூடாதென்றில்லை இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
1. வான்புவி தோன்றும் முன்னவர் கிரியை மண்ணுயிர்க்காகவே முடித்தனரன்றோ இனியுமே உமக்காய் செய்வதொன்றிலையே அனைத்துமே பெறுவாய் விசுவாசத்தால் - காண்
2. சித்தமுண்டெனக்கு நின் பிணி போக்க சுத்தமாகிடுவாய் என்றவர் வார்த்தை சாத்தியமாகுமே இத்தரையதிலே நித்திய மருந்தல்லோ இயேசு தானே - காண்
3. சொல்லிட ஆகும் ஆணையால் நிலைக்கும் எல்லாமே அவர் வார்த்தையால் நிகழும் கூறிடுவீரே நீரும் அம்மொழிகள் நேரிடும் அதுபோல் இஷணமே - காண்
4. ஆவியின் பெலத்தால் உயிர்த்தெழுந்தாரே அழித்தாரே குருசில் தீயோரின் சதியே பரிகரித்திடுமே அவர் திரு நாமம் பாவங்கள் சாபங்கள் நோய்களுமே - காண்
5. ஜீவிக்கிறேன் நான் என்றென்றும் சீயோனின் மாறிடா ராஜனாய்- என்றார் இன்றும் உமக்குப் உயிரளிப்பாரே நின்றதை பெறுவாயே விசுவாசத்தால் - காண்