காணவேண்டிய தேசம்
kaanavendiya thesam
காணவேண்டிய தேசம் ஒன்றிரண்டு அதுவே கானான் காணவேண்டிய தேவன் ஒருவரே கர்த்தர்
தேசமெங்கிலும் பாலும் தேனுமே ஓடும் என்றார் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நான் உன்னை என்றார்
கண்ணீர் கஷ்டமோ துன்பமோ வாட்டும் வேளையில் காக்க வல்லவர் கருணைக்கடல் அவர் உன்னை கைவிடார்
வியாதி படுக்கையில் தனிமை வேலையில் கலங்கும் போதெல்லாம் சாவை வென்றவர் சர்வவல்லவர் உன்னை நடத்துவார்
அல்பா ஒமேகா ஆதி அந்தமும் நானே என்றார் நேற்றும் என்றுமே நாளை என்றுமே மாறேன் என்றார்