கானக மேய்ப்பரே நல்ல
kaanaga meypparae nalla
கானக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள் வானவர்வேந்தனாய் பாரினில் பிறந்தாரே
பிறந்தார் அல்லேலூயா 3 இயேசு பிறந்தார் ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து பாலனை தொழுதிடுவோம் பிறந்தார் அல்லேலூயா 2 இயேசு பாலன் பிறந்தார்
பெத்தலையின் சத்திரத்தில் கன்னி மா மரியாள் புத்திரனாய் அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள்
விண்ணுலகில் தேவனுக்கே மகிமை என்றென்றுமே மண்ணுலகில் சமாதானம் மனுடரில் பிரியமாமே