கானான் பயணமோ தூரம்
kaanaan payanamo thooram
கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே - கானானில் களிப்புடன் சேர்ந்திடுவோம்
பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் - ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார்
வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் - தினம் வழுவாமல் நம்மை நடத்திடுவார்
மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார் ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும் மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் - அந்த மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம்
யோர்தானைக் கடந்து சென்றுவிடுவோம் எரிகோவைத் தகர்த்து வென்றிடுவோம் யோர்தானை பிளந்து இஸ்ரவேலை நடத்தும் யேகோவா கர்த்தர் உடன் வருவார் இன்பக் கானானில் கொண்டு சேர்த்திடுவார்