காலமோ கடைசியாகுதே
kaalamo kadaisiyaagudhae
காலமோ கடைசியாகுதே பாவமோ பாரில் படர்ந்து பெருகுதே ஞாலமதை நியாயம் செய்ய சீலகுண தேவதூதன் திரும்பி வருகிறார்
1.கொடிய நாட்களில் கடும் செயல்கள் காணுதே மடியும் மார்க்கத்தில் மக்கள் மகிழ்ந்து செல்கின்றார் சடிதில் நீங்கும் இக்காரிருளும் விடியும் நேரம் விரைந்ததென்று விழித்திடுவீரே
2. அறிவு பெருகினால் ஆத்மா அறிந்து போகின்றார் பொறியின் வினைகளால் பொல்லா கிரியை செய்கின்றார் பல்விதமாம் தொல்லை நேரும் அல்பகலும் ஆண்டவரை அருகில் நிறுத்துவீர்
3. வருவேன் என்றவர் சொன்ன வாக்கு எங்ஙனம் பெருமிதமாய் பரிகாசர் பேசுவார் கருணை காட்டி கயவர் உய்ய அருமை இயேசு தாமதித்தார் வருவார் நிச்சயம்
4. கர்த்தர் அருளிய வேத சத்தியங்களை பித்தர்கள் கூடி மிகப் புரட்டி மொழிகின்றார் உத்தமராய் சத்தியம் காத்து இத்தரையில் இயேசு வர இரங்கிடுவீரே
5.இத்தரை மீது இனி சம்பவித்துவிடும் மெத்த தீமைகள் இவை யாவுக்கும் தப்பி கர்த்தர் முன்னே சுத்தராய் நிற்க நித்தமும் விழித்திருந்து வேண்டுதல் செய்வீர்