காலம் நெருங்கி விட்டதே
kaalam nerungi vittadhae
காலம் நெருங்கி விட்டதே - நமது யேசு கர்த்தர் வரச் சமயமே - சகோதரரே காலம் நெருங்கி விட்டதே.
தேவாதி தேவன் முன்னே செப்பிய மொழிப்படி கள்ளனைப் போல் வருவார் கருத்தாய் இருப்போம் நாமும்.
1. அடையாளம் சொல்லி வைத்தாரே அதிலே இப்போ அனந்தம் முடிவுமாச்சுதே அவர் சொல்படி அடையாளம் சொல்லி வைத்தாரே மேசியா யேசுராஜன் மேகமீதில் வருவார் தாவி அவரில் செல்லத் தயாராய் இருக்க வேணும்.
2. பாவத்தை விட்டகலுவோம் நமதுள்ளத்தில் பரிசுத்தம் தங்கச் செய்வோம் இன்றே இன்றே பாவத்தை விட்டகலுவோம் மேவி யேசுவிடத்தில் தாவி ஓடியே சென்று சுத்தன் கிறிஸ்துவோடு சுகமாய் இருக்கலாமே.
3. கடைசித் தூதாய் வருகுதே திரு வசனத் துரையை விளக்கிச் சொல்லுதே மீந்த சபை கடைசித் தூதாய் வருகுதே சத்திய மார்க்க மிதில் சல்தியில் சென்று நாமம் சுத்திகரிப்படைந்து சுகமாயிருக்க வாரும்.