காலையில் தேவனைத் தேடிடுவோம்
kaalaiyil devanaith thediduvom
காலையில் தேவனைத் தேடிடுவோம் வேளையிதே அவர் வெளிப்படுவார் தேவனை தேடிடும் நேரமிதே தேடி பரன் முகம் கண்டடைவோம்
அதிகாலையில் எழுந்திடுவோம் துதி பலியவர்க்கே செலுத்திடுவோம் புதுபல கிருபைகள் அடைந்திடவே புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம்
ஆத்தும நேசரை தேடிடுவோம் ஆவலுடன் அதிகாலையிலே ஆயத்தமாகியே காத்திருப்பேன் ஆண்டவர் என் ஜெபம் கேட்டிடுவார்
கண்மணி போல் சென்ற இராவினிலே கண்ணுரங்காமலே காத்தனரே இன்னும் வரும் பகல் முழுவதிலும் இன்னல்கள் நீக்கியே காத்திடுவார்