காலைதோறும் கர்த்தரின் கிருபையால்
kaalaidhorum kartharin kirubaiyaal
காலைதோறும் கர்த்தரின் கிருபையால் மகிழ்ந்து பாடுதே என்னுள்ளம் அல்லேலூயா ஆ . . . ஹா . . . நேசரேன் என்னுடன் இன்றும் என்றும் இருப்பதால் ஒன்றிற்கும் குறைவு இல்லையே
நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போல வறண்ட நிலம் நீரினை கண்டது போல என்னாத்துமா தேவனிலே என்றென்றும் வாழ்ந்து மகிழ்ந்திருக்குமே
ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபையும் ஜீவனுள்ள நாளெல்லாம் உமது நன்மையும் என் வாழ்விலே தொடரட்டுமே என் ஆவி உம்மிலே மகிழ்ந்திருக்குமே